முதல்வன் மீது தாக்குதல்:பின்னணியில் பொலிஸ்?


கிளிநொச்சி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது ஊடக
அலுவலகம் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு ஊடக அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் கடந்த 30ம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

முற்று முழுதாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் முதல்வன் எனும் இணைய ஊடக அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகவியலாளரும் தாக்கப்பட்டுள்ளார்.

எனினும் இன்று வரை தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
தற்போதைய சூழலில் ஊடகவியலாளர்களது பணி அர்ப்பணிப்பு மிக்கதாகும்.

இந்நிலையில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டு வந்திருந்த நிலையில் இத்தாக்குதலின் பின்னணியில் பொலிஸார் இருக்கலாமென முதல்வர் ஆசிரிய பீடம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பொலிஸ் புலனாய்வு துறை தொடர்பில் பல மோசடிகளை முதல்வன் அம்பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


No comments