சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி?


நீதிமன்ற படியேறி வெட்டிவிழுத்துவதாக ஊடகங்கள் வழியே காண்பிப்பதும்
மக்களது தலையில் மிளகாய் அரைப்பதும் சுமந்திரன் அன்கோவினது வழமையான பாணியாகும்.

அவர்கள் சொல்வதை விழுங்கி பின்னர் வாந்தி எடுப்பதே ஊடகத்தொழில் என கும்பல் ஒன்று கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை திரிவது உழுத்துப்போனதொரு உத்தியாக உள்ளது.

ஆனாலும் அதனை ஊடகவியலாளர்கள் சிலரே போட்டுடைத்து அம்பலமாக்கும் பரிதாபம் தொடர்கின்றது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது எந்தச் சட்டத்தின் கீழ் என்று கேள்வி, எழுப்பி ஊரடங்குச் சட்டம் தவறானது எனச் சுட்டிக்காட்டியதாலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு, நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

ஆனால் நுகேகொட நீதிமன்றம் குற்றங்களின் அடிப்படையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்குப் பிணை வழங்கும் நீதிமன்றமே தவிர, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல என்று எனது முகநூல் வெளியான பதிவில் சட்டத்தரணி ந. காண்டீபன் மூத்த ஊடகவியலாளர் நிக்சனிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

சில தமிழ் அச்சு ஊடகங்கள் வழக்கின் தன்மையை அறியாமல் எழுந்தமானமாகச் சுமந்திரனைத் தூக்கிப் பிடிப்பதாக நிக்சன் தனது பதவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள நிக்சன் ஆனால், உங்கள் முகநூல் பதிவு தவறு என்றும், நீதிமன்றம் பிணை எவ்வாறு வழங்கியது என்பது பற்றியும் யாழ்ப்பாணத்தில் உள்ள மூத்த ஊடக ஜம்பவான் ஒருவர் எனக்குத் தொலைபேசியில் விளக்கமளித்தார்.


சுமந்திரனின் திறமைகள் பற்றியும் காண்டீபனுக்கு என்ன சட்டம் தெரியும் என்றும் அவர் கேள்வி தொடுத்தார். ஆனால் அவருக்கு நான் எந்தப் பதிலும் கூறாமல் அமைதியாகக் கேட்டுவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தேன்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சுமந்திரனை அழைத்த நுகேகொட நீதிமன்றம், ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கியமை தொடர்பாக சுமந்திரனால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகள் குறித்து விளக்கம் கோரியது.

ஊரடங்குச் சட்டம் தவறானது என்ற அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டதா என்று நீதவானிடம் கேள்வி கேட்டுப் பொலிஸார் நுகோகொட நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆதாரமாக நாளேடுகள், இணைச் செய்திகளையும் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

பொலிஸாரின் இந்த நகர்த்தல் பத்திரம் தொடர்பாகவே சுமந்திரன் இன்று அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்படடார்.

விளக்கம் முடிவடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சுமந்திரன் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார்.ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்ட வழங்கில், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமை தவறு என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தான் எதுவுமே பேசில்லை என்று சுமந்திரன் சொன்னார்.அத்துடன் தான் கூறியதாக அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீதிவான் முன்னிலையில் சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் பதட்டமான குரலில் கூறுகிறார்.

ஆகவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமை சட்டரீதியானதல்ல என்ற தனது வாதத்தினாலேயே ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதென ஊடகங்களுக்குப் பொய்யான தகவலை சுமந்திரன் வழங்கியிருக்கிறார் என்பது இங்கே நிரூபிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்ட விடயத்தைச் சுமந்திரன் தவறாகத் திசை திருப்பி மக்களையும் தவறாக வழிநடத்தியுள்ளாரென்றே பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த தமது நகர்த்தல் பத்திரத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனவே நீதிமன்ற அவமதிப்பு என்று குற்றம் சுமத்திச் சுமந்திரன் மீது பொலிஸார் அல்லது பொதுமகன் ஒருவர் வழக்குத் தொடர முடியும்.

நுகேகொட நீதிமன்றத்தில் பிணை வழங்கும் வழக்குகள் மாத்திரமே நடைபெறும். அங்குதான் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிணை வழங்குவது தொடர்பான பயிற்சிகளை எடுப்பார்கள்.

இந்த நீதிமன்றத்தில் ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம் பற்றியெல்லாம் சட்டத்திரணிகள் பேசுவதுமில்லை. அது குறித்த வழக்குகள் இடம்பெறுவதுமில்லை. குற்றவியல் குறித்த வழக்குகளோடு தொடர்புடைய பிணை வழக்குகளே இங்கு பேசப்படும். இது ஒரு ஆரம்ப நீதிமன்றம்.

பொலிஸாரின் அனுமதிக் கடிதம் இன்றி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது ரஞசன் ராமநாயக்கா வெளியே நாடமாடினார் என்றும் பொலிஸாரின் கடமைகளுக்குத் தடைகள் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலுமே ரஞ்சன் ராமநாயக்கா கைதாகி விளக்கமயலில் வைக்கப்பட்டு ஏழு நாட்களின் பின்னர் பிணையில் விடுக்கப்பட்டார் என நிக்சன் தெளிவூட்டியுள்ளார்.

No comments