காப்பாற்றவில்லை:நிர்வாணப்போராட்டம்?


ஜெர்மனியில் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் தங்களுக்கு
போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததைக் கண்டித்து மருத்துவர்கள் அரை நிர்வாண இருக்கும் செல்பிக்களை வெளியிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்கள் இந்த அரை நிர்வாண செல்பிக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் எதிர்ப்பை பிளாங்க் பெடென்கென் அல்லது நிர்வாண குவால்ஸ் என்று அழைக்கின்றனர்.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நாங்கள் வேலையின் மீதான உறுதிப்பாட்டையோ, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்தவோ விரும்பவில்லை என்றனர். "நாங்கள் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு சரியான (பாதுகாப்புக் சாதனங்கள்) பி.பி.இ. தேவை."
ஜனவரி கடைசியில் ஜெர்மனியை வைரஸ் தாக்கியதிலிருந்து பாதுகாப்பு சாதனங்கள் அதிகமாக வழங்கப்பட வேண்டுமென்று பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை என்றனர்.

ஜெர்மன் மருத்துவ தொழில்நுட்ப சங்க தலைமை நிர்வாகி மார்க்-பியர் மோல், கொரோனா பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில் மருத்துவமனைகளில் இருந்து கிருமிநாசினிகள், முகக்கவசங்களை கிரிமினல் கும்பல்கள் திருடிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

No comments