குரங்களுக்குகளைப் பாதுகாத்தது கொரோனா தடுப்பூசி!!

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி  குரங்குகளை அந்நோயிலிருந்து பாதுகாத்துள்ளது என சீனா அறிவித்துள்ளது.


சீனாவின் சீனாவின் மருந்தாய்வு நிறுவனமான சினோவாக் பயோடெக் (Sinovac Biotech) நிறுவனம் முதல் முதலாக குரங்குகள் மீது கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளது. அதன் பெறுபேறுகளும் சாதாகமாக அமைந்துள்ளன.

எட்டு ரீசஸ் மாகேக் குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் ஏற்படும் பகுதியில் தங்கவிடப்பட்டன. மூன்று வாரங்கள் கழித்து அக்குரங்குள் பரிசோதிக்கப்பட்ட போது அக்குரங்குள் எவையும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரங்குகளுக்கு இருமுறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவை வெவ்வெறு அளவுகளில் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து குரங்குகளும் "SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்டன" என்று சினோவாக் தனது கண்டுபிடிப்புகளில் தெரிவித்துள்ளது.

அதிகளவு மருத்து செலுத்தப்பட்ட நான்கு குரங்குகளும் 7 நாட்களின் பின்னர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அக்குரங்குகளின் நுரையீரலில் எதுவித தாக்கங்களும் இடம்பெற்றதாக எதுவும் கண்டிறியப்படவில்லை.

தடுப்பூசி போடாத மற்றைய நான்கு குரங்குகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிய போது அக்குரங்குகள் வைரசால் பாதிக்கப்பட்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டன.

ஆகவே தடுப்பூசி குரங்குகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளதாக அந்நிறுவனம் முடிவுக்கு வந்துள்ளது என செய்தி வெளியிட்டதுடன் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் குவாங் ஏ.எவ்.பியிடமும் கூறியுள்ளார்.

No comments