ஊரடங்கு தளர்த்தப்படுதல் தேர்தல் அரசியலுக்கே?



உலக நாடுகள் மெதுவாக Lockdown கட்டுப்பாடுகளை தளர்த்தி (Relax Restrictions) வருகின்றன . அந்த வகையில் ஐரோப்பியா நாடுகளில் ஒன்றான டென்மார்க் நாட்டு அரசாங்கத்தின் Disease Control Research Centre ஆக கருதப்படும் Statens Serum Institut (SSI) என்கிற நிறுவனம் நிபுணர் குழுவை (expert group) ஒன்றை நியமித்து ஒரு mathematical model ஐ உருவாக்கி இருந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட திகதிகளில் தளரத்தப்படும் கட்டுப்பாடுகளால் ஏற்பட போகும் தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் Lockdown நடைமுறைகளில் பல தளர்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன

சமகாலத்தில் இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக அமுலில் இருந்த ஊடரடங்கு நடைமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டு இருக்கிறது . இந்த தளர்வுகளை நியாப்படுத்துவதற்காக இலங்கையில் அதிகாரத்தில் உள்ள ராஜபக்சே குடும்பத்தின் தேசிய (?) தொலைக்காட்சியாக சொல்லப்படும் Derana ஊடகம் நேற்றைய மதிய ஊடக செய்தியில் கொரோனா பரவல் இலங்கையில் குறைந்து செல்கிறது என்கிற தோற்றபாட்டை உருவாக்க கூடிய ஒரு Graph ஐ வெளியிட்டு இருந்தது

இதில் அதில் "X" axis உள்ள அலகுகள் முதலில் வாரங்களில் (Weeks) குறிப்பிடப்பட்டு இருந்தன ., ஏப்ரல் 15 முதல் "X" axis உள்ள அலகுகள் நாட்களில் குறிக்கப்பட்டு இருந்தன அதைப் பார்க்கும்போது, இலங்கையில் COVID-19 தொற்றுநோய் அபாயம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதைப் போல வரைபடம் குறிக்கிறது. In it the times units in X axis were first mentioned in weeks, and from April 15th onwards, days. Looking at it, the graph indicates as if the COVID-19 pandemic in Sri Lanka is almost over.

ஆனால் தரம் 8 கணித பாடம் படித்த எல்லோருக்கும் "X" axis இரண்டு வேறுபட்ட அலகுகளை (two time formats) உள்ளடக்கி Graph வரைதல் மிக தவறான விடயம் என தெரிந்து இருக்கும். ராஜபக்சே குடும்பமும் அவர்களின் ஊடகங்களும் தங்களுக்கு வாக்களித்த 69 லட்சம் பேரும் 8 ஆம் ஆண்டு கணிதம் சித்தி பெறவில்லை என உறுதியாக நம்புகிறார்கள் போல இருக்கிறது .

.ஊரடங்க்கு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமானது தான் . ஆனால் அரசாங்கம் என்கிற ரீதியில் தங்கள் முடிவை நியாயப்படுத்த அறிவியல் ரீதியாகவோ / கணித ரீதியாகவோ நடைமுறைகளில் ஏற்படும் தளர்வுகளினால் ஏற்படும் விளைவுகளை கணித்து தாங்கள் எடுத்த முடிவை நியாயப்படுத்தி பொதுமக்களுக்கு சொல்லி இருக்க வேண்டாமா ?

ஆனால் அபாயங்களை கூட மதிப்பிடாமல்., அரசியல் இலக்குகளை அடைவதற்கான தகவல்களை பொய்யுரைத்து வாக்காளர்களை ஏமாற்ற முயற்சிப்பதை எப்படி சொல்லுவது ?

No comments