பஹ்ரைன் வழியான பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து ஆரம்பம்!

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

மனோமாவை தளமாகக் கொண்ட வளைகுடா ஏர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்க்க  பஹரைன் நாட்டிற்குள் நுழைவதற்கு  பஹ்ரைனியர்களுக்கும் அந்நாட்டில் வசிக்கும் பிற நாட்டவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.

தற்போது "பஹ்ரைன் சிவில் ஏவியேஷன் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு இணங்க, பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து பயணிகளை நாங்கள் மீண்டும் வரவேற்கிறோம். பஹ்ரைனுக்கு வருவது நாட்டினருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்று விமான நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

No comments