அபாய வலயத்திலிருந்து சிம்பிளாக யாழ்.வந்துள்ள அதிகாரி?


ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் அதிஉயர் அபாய வலயம் ஒன்றில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் யாழ் மாவட்டத்திற்கும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் அதிஉயர் அபாய வலயத்திற்கும் உத்தியோக பூர்வ இடமாற்றம் வழங்கப்பட்டு இருவரும் தமது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக மூத்த கிராமசேவை அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இத்தனைக்கும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேற்படி இருவருக்கும் எந்தவிதமான பரிசோதனைகளோ அல்லது சுகாதார சான்றிதழ்களோ வழங்கப்படவில்லை.

அந்த அதிஉயர் அபாயவலயத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து குறித்த திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றின் நிறைவேற்றுத்தரத்தில் அமர்ந்திருக்கும் குறித்த அதிகாரிக்கு கிட்ட நெருங்க அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் ஏனைய அலுவலர்கள் அச்சப்படுகின்றனராம் ,அதனால் அலுவலகத்துக்கும் வருவதில்லையாம். மேலும் குறித்த இந்த திணைக்களம் அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டிய திணைக்களம் என்பதும் நிதி அமைச்சுக்குட்பட்ட திணைக்களம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

No comments