கொரோனா நெருக்கடி; வழமைக்குமாறாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யேர்மன் அதிபர்!

ஜேர்மனிய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை "எங்கள் மனிதகுலத்தின் சோதனை" என்று கூறியுள்ளார்.

ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்துமஸ் தவிர வேறு தொலைக்காட்சியில் முறையாக உரையாற்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட பிரத்தியேக தொலைக்காட்சி உரையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது பொறுமை, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையைக் காட்டுமாறு ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்  மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

 "இப்போது நீங்கள் ஒவ்வொரு நாளும் காட்டும் ஒற்றுமை, எதிர்காலத்தில் எங்களுக்கு இன்னும் தேவைப்படும்" என்று அவர் கூறினார்.

ஜேர்மன் ஜனாதிபதி வைரசுக்கு எதிராகப் போராட உலகளாவிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் . வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு  தனிநபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
"தற்போதைய நெருக்கடிநிலை எவ்வாறு தொடரும், எப்போது, ​​எப்படி கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்பது அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்களால் மட்டும் தீர்மானிக்கப்படாது." இது மக்களின் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது  என குறிப்பிட்டுள்ளார்.

No comments