நாளை பகல் முழுவதும் ஊரடங்கு நீக்கம்?


யாழ்.மாவட்டமுள்ளிட்ட சில மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் நாளை (9) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை மாலை 4 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த மாவட்டங்களில் மீண்டும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நான்காவது நாளாக புதிய கொரோனா தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா நோயாளி உடல்நிலை தேறி நேற்று சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார.

தாவடியை சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாரரான குறித்த நோயாளி சர்ச்சைக்குரிய சுவிஸ் கோரோனோ பாதிரியாரை சந்தித்ததன் மூலம் தொற்றுக்கு இலக்காகி இருந்தார்.

இவரின் தொற்றை தொடர்ந்து தாவடி பகுதி முடக்கப்பட்டதுடன் பலர் தனிமை படுத்தபடடுள்ளதுடன் இராணுவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

No comments