ஆரம்ப பரிசோதனையிலேயே 12 மணிநேரத்துக்குள் பலனளித்த கொரோனா தடுப்பு மருந்து!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குரங்குகள் பரிசோதனை மருந்து ரெமெடிசிவிர் (remdesivir) மூலம் சிகிச்சையளிக்கப்பட்டவை கணிசமன அளவு முன்னேற்றமடைந்துள்ளதாக  ஆரம்ப மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.

முதல் சிகிச்சையின் 12 மணி நேரத்திற்குப் பிறகு விலங்குகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஆன்டிவைரல் மருந்து ரெமெடிவிர் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க அரசாங்க விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

 "வைரஸ் தடுப்பு மருந்து ரெமெடிவிர் உடனான ஆரம்ப சிகிச்சையானது  COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2 நோயால் பாதிக்கப்பட்ட ரீசஸ் மாகேக்கின் நுரையீரலுக்கு ஏற்படும் சேதத்தை கணிசமாகக் குறைத்தது" என்று தேசிய சுகாதார நிறுவனங்களின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments