கொரோனாவுக்கு சாராயம் தீர்வு? ஈரானில் குடித்த 728 பேர் பலி!!

ஈரானில் விச சாராயம் அருந்தியதில் இதுவரை 728 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ்
ஜஹான்பூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. கொரோனா தொற்று நோய்க்கு சாராயம் அருந்தினால் குணமாகும் என வதந்திகள் பரவியது. அதை நம்பி பலரும் மெத்தனால் என்ற வேதியப் பொருள் (toxic methanol alcohol) கலந்த சாராயத்தை அருந்தத் தொடங்கினர்.

கடந்த பெப்ரவரி மாதம் இதைக் குடித்தவர்கள் 30 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். இன்று வரை 728 பேர் உயிரிழந்துள்ளனர். 5,500 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.

இச்சாரயத்தைக் குடித்தவர்களில் பலர் பார்வையை இழந்துள்ளனர்.

குறித்த சாராயத்தை அருந்துவதால் குருட்டுத் தன்மை, கோமா, உடல் உறுப்பு செயலிழப்பு, மூளைப் பாதிப்பு என்பன தோற்றும் என எச்சரிக்கையையும் தாண்டி மக்கள் சாராயத்தைக் குடித்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என செய்தி தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments