கொழும்பு இறக்குமதிகளுடன் மகளிர் தினம்:முல்லையில் வீதியில் போராட்டம்!


அரசியலில் புதிய முகங்களுடன் தென்மராட்சியில் மகளிர் தினத்தை தமிழரசுக்கட்சி முன்னெடுக்க மறுபுறம் முல்லைதீவில் கண்ணீருக்கு மத்தியில் காணாமல் போனோர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி வனப்புறு வனிதையர் என்ற பெயரில் நடத்தப்பட்ட உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

கொழும்பில் இருந்து தருவிக்கப்பட்ட ரவிராஜ் மனைவி மற்றும் அம்பிகா ஆகியோhர் களமிறக்கப்பட்டு விமரிசையாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

மறுபுறம் பறி கொடுத்த பிள்ளைகளுக்கு நீதி வேண்டி வயோதிப தாய்மாரின் போராட்டம் கண்டுகொள்ளப்படாது அநாதையாக வீதியில் நிற்கிறது.

உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் நுண்நிதி கடன் தொல்லையால் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..சிறுநீரகத்தை விற்று இருக்கிறார்கள் .வறுமை தாங்க முடியாமல் குழந்தைகளை கைவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு உழைக்க போய் இருக்கிறார்கள்..இவர்களுக்காக பேசாத நாடளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாளாக பறிகொடுத்த பிள்ளைகளுக்க்காக வயதான அம்மாக்களும் சிறு குழந்தைகளும் வீதியில் நிற்கிறார்கள்.இதில் 90 க்கும் மேற்பட்டவர்கள் எந்த நீதியும் கிடைக்காமல் செத்து போய் இருக்கிறார்கள்.இவர்களுக்காக தமிழ்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை.

வடக்கு கிழக்கு எங்கும் 90,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார சமூக, நெருக்கடிகளை எதிர் கொண்டு வீதியில் நிற்கிறது .கடந்த 4 ஆண்டுகளில் இந்த குடும்பங்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யப்படவில்லை. இவர்களுக்காக எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லையென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments