கோத்தாவுக்கு அனைத்தும் தெரியும்:மணிவண்ணன்?


இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என இலங்கை அரசாங்கத்தை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (06) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்கிறார்.அரசியல் கைதிகளே இல்லையென்கிறார்.
அவர் அவ்வாறு கூறுவதால் நடந்தவை அவருக்கு தெரிந்துள்ளது.அதனால் பயமின்றி சர்வதேச நீதிமன்றில் ஆஜராக முடியும்.
அதனால் தான் இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தான் யார் கடத்தலில் ஈடுபட்டார்கள், யார் காணாமல் செய்யப்பட்டார்கள், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன எனும் அனைத்து மர்மங்களும் வெளியில் வரும் என வி.மணிவண்ணன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments