தேர்தலிற்கு ஆள்பிடிக்கும் கூட்டமைப்பு?


தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படாத போதும் கூட்டமைப்பின் பிரச்சாரம் மும்முரமடைந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் கதிரை கேட்போர்,மாகாணசபைக்கு கதிரை கேட்போர்,ஒட்டி பிழைத்துக்கொள்வோர் என கும்பல் ஒன்று பின்னால் திரிய மக்களோ தங்கள் வாழ்வியலுக்காக போராடிவருகின்றனர்.

இந்நிலையில் மக்களது தன்னெழுச்சி போராட்டங்களை தடுப்பதை கூட்டமைப்பு தற்போது கையில் எடுத்துள்ளது.கேப்பாபுலவில் போராட்டத்தில் நின்ற மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு தயாராகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்களின் ஜனநாயக வழி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடம் பூர்த்தியாகிய நிலையில், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றிற்கு தயாராகியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பங்குபற்றவிருந்த ஒரு பகுதி மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றிற்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவு மக்கள் 2017.03.01 தொடக்கம் கேப்பாபுலவில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும் 104 குடும்பங்களின் சொந்தக்காணிகள் மற்றும் பாடசாலை,சனசமூக நிலையம், முன்பள்ளி, ப.நோ.கூ.சங்கம், பொது விளையாட்டு மைதானம், இந்து, கிறிஸ்தவ மயானங்கள்,கிறிஸ்தவ தேவாலயம் என்பனவற்றை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை. 

No comments