சிறீகாந்தாவும் கண்டிக்கிறார்?


ஆளுக்கொரு நீதி என்பது எவராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அனைவருக்கும் சமநீதி வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களில் ஒருவருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.
யுத்தத்தின் போது சாவகச்சேரிப் பிரதேசத்தில் மிருசுவில்  கிராமத்தில் சிறுவர்கள் உட்பட தமிழ்ப் பொதுமக்கள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவருக்கு இப்பொழுது ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆளுக்கு ஒரு நீதி என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற அடிப்படையில் ஓர் பகிரங்க வேண்டுகோளை ஜனாதிபதியிடம் விடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

நடந்து முடிந்த யுத்தத்தின் போது நிகழ்ந்த சில வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பலர் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களில் ஒருசில இராணுவ வீரர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் மற்றும் சில தமிழ்ப் பொதுமக்களும் அடங்கியுள்ளனர்.
மிருசுவில் சம்பவத்திற்கு ஒரு நீதி என்றும் ஏனைய சம்பவங்களுக்கு ஒரு நீதியெனவும் இருக்கக் கூடாது இந்த விடயத்தில் ஒரே அளவுகோல் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே நியாயமானதாகும்.

எனவே தான்இ சகலருக்கும் சமநீதி என்ற சர்வதேசக் கோட்பாட்டின் அடிப்படையில்  யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் ஓர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும் என பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.



No comments