மேலும் பலருக்கு அமெரிக்க தடை வரலாம்?


சவேந்திர சில்வாவை தொடர்ந்து மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட நல்லிணக்க யோசனையில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அறிவித்தது.

அத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த எம்சிசி உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதுவும் நாட்டைக் காட்டிக்கொடுத்து உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கிற்கு பயணம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர்.
சந்திப்பின் போதே இத்தகவல் கசிந்துள்ளது.

No comments