கொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு

கொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


இது குறித்து ரஷ்ய விஞ்ஞான அக்கடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவிக்கையில்:-

பல ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய விஞ்ஞான அக்கடமியால் வேறு ஒரு வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. குறித்த மருந்தை சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது வைரஸ் தொற்றைக் குணப்படுத்த சிறப்பாக தாயாரிக்கப்பட்ட இன்ஹேலர் தயாராக உள்ளது. அது கொரேனா வைரசுக்கு சிகிற்சை அளிக்கை உதவியாக இருக்கும்.

இதுபோன்று மேலும் இரு மருந்துகள் எங்கள் வசம் இருக்கின்றன. ஒன்று யப்பான் நாட்டின் மருந்து ஒன்றின் அடிப்படையில் தயாரிக்கபட்டுள்ளது. மற்றொன்று தற்போது ஆய்வு கூடத்தில் பரிசோதனை முடிந்துள்ளது. குறித்த மூன்று மருந்துகள் மருந்துவ பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம் என்றார் விளாடிமிர் செகோன்.

No comments