தமிழர் தாயகத்தில் மீண்டும் போராட்டம்!


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையினை கோரி வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்த குடும்பங்கள் முற்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இன்று பகல் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இலங்கை அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30-1 பிரேரணை தீர்மானத்தின் இணை அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்து வெளியேறியுள்ளது. உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதனை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுட்டிக்காட்டியே வருகின்றனர்.அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வந்தபோதும் எமது கோரிக்கைகளை புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்தது. இனியும் காலம் தாழ்த்தாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டத்திற்கு  மத குருக்கள்இபொது அமைப்புகள்இ வர்த்தக சங்கங்கள் சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன.

No comments