வடக்கு மாகாணம் அபாய பகுதியல்ல!


வடக்கு மாகாணம் அபாயகரமான பகுதி என எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை. போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என
ஐனாதிபதி ஊடகப்பிரிவு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் பத்திரிகையிடம் கோரியுள்ளது.

வடமாகாணம் முழுவதும் அபாய வலயமாக பிரகடனப்படுத்துவதகான எந்தவொரு முடிவையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட ஒட்டுமொத்த வட மாகாணத்தையும் அரசாங்கம் கொரோனா தொற்று பரவும் அபாய வலயமாக பிரகடனம் செய்துள்ளது என வெளியாகிவரும் தகவல்களுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த விடயத்தை உறுதிசெய்தார்.

யாழிலிருந்து வெளிவரும் குறித்த நாளிதழின் இணைய பக்கத்தில் யாழ்ப்பாணம் உட்பட ஒட்டுமொத்த வட மாகாணத்தையும் அரசாங்கம் கொரோனா தொற்று பரவும் அபாய வலயமாக பிரகடனம் செய்துள்ளது என செய்தியை வெளியிட்டிருந்தது.

No comments