அம்பிகாவை எதிர்த்து களம் புகுந்தது மகளிர் அணி?

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக அம்பிகா சற்குணநாதன் நிறுத்தப்பட்டது தொடர்பில் இன்று (08) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் சென்ற தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்ட மகளிர் அணி கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சந்திப்பின் பின்னர் மகளிர் அணியினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அம்பிகா சற்குணநாதனை எமக்கு தெரியாது யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும். யாழ்ப்பாணப் பெண்களுக்கு இப்படியான பெண் தேவையில்லை. இது தனி நபரின் தீர்மானம். சுமந்திரனே அவரை கொண்டு வந்தார். அம்பிகாவை எமக்கு யாரென்று தெரியாது. - என்றனர்.

அம்பிகா என்பவர் தமிழ் மக்களின் போராட்டங்களில் பங்கபற்றினாரா? மனித உரிமைகள் ஆணையாளராக இருக்கலாம். எமக்காக இதுவரை குரல்கொடுத்தாரா என கேள்வியும் எழுப்பினர்.

இதேவேளை தமிழ் அரசு கட்சியின் மகளிர் அணியில் பெரும்பான்மையானோர் அம்பிகாவை எதிர்க்கும் நிலையில் மகளிர் அணியின் தலைவி அம்பிகாவை தெரிவு செய்த முடிவுக்கு இசைந்து போகும் நிலை இருப்பதால் பலரும் வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலை காணப்படுவதாக மகளிர் அணி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments