பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில், அமைதியான முறையில் வரிசைகளில் காத்திருக்கும் நுகர்வோருக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை கவனத்திற் கொள்ளாது பொருட்களை வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களிடமும் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்று தினங்களின் பின்னர் இன்று 8 மணிநேர ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் சுய பாதுகாப்புடனும் சுகாதாரத்தை பேணும் வகையிலும் அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு அமைதியான முறையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு ஊரடங்கு அமுலாகும் நேரத்தையும் பார்க்காது பொருட்களை வழங்குமாறு விறிபளை நிலைய உரிமையாளர்களுக்கு பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments