இன்று 310 பேர் சான்றிதழ் பெற்று வெளியேறினர்

வவுனியா - பம்பைமடு மற்றும் வேலன்குளம் இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 310 பேர் இன்று (31) காலை தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் பம்மைமடு இராணுவ முகாமில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 16ம் திகதி 120 விமான பயணிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பிய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

No comments