உணவகத்துக்குள் மோதல்; ஒருவர் வெட்டி கொலை

நீர்கொழும்பு - பெரியமுள்ள பகுதியில் அமைந்துள்ள அன்சார் ஹோட்டலில் இன்று (09) இரவு 9.45 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இருவர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குழு ஒன்று குறித்த ஹோட்டலுக்கு சென்று மதுபானம் அருந்த அனுமதி கேட்டப்போது அதற்கு ஊழியர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட குழப்பம் கொலை வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments