சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிக்கின

மன்னாரில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் பள்ளிமுனை கோந்தைபிட்டி கடற்கரையோர பகுதியில் பற்றையில் இருந்து இன்று (3) காலை சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சிகளும் நேற்று மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

No comments