வன்னி வரும் ஹேமகுமார


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரவின் தாய்நாட்டு மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி, பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதன் முறையாக இம்முறை போட்டியிடவுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதாகவும், தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே,  அதன் வேட்பாளர்களாக வடக்கு, கிழக்கில் நிறுத்தப்படுவார்கள் என்றும், இக்கூட்டணி அறிவித்துள்ளது.
தாய்நாட்டு மக்கள் கட்சியின் முக்கிய பங்காளியாக இணைந்துள்ள உலமா கட்சியின் தலைவர் அப்துல் மஜித் முபாரக் மௌலவி, இம்மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவை முன்னின்று மேற்கொள்கின்றார்.
மேலும் தேசிய முன்னணி போன்ற பங்காளிகளை இணைத்துகொண்டு கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இக்கூட்டணி போட்டியிடவுள்ளது.
ஆனால் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள 40 கட்சிகளில், 'தாய்நாட்டு மக்கள் கட்சி' முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் சின்னம் ஆகாய விமானம் ஆகும்.

No comments