இறக்குமதி வேட்பாளர்கள் எம்மிடமில்லை:விஜயகாந்த்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசியக்கட்சி தனித்து சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அக்கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை தனது கட்சி தனித்து சுயேட்iசையாக வேட்புமனுவை தாக்கல் செய்யுமென யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்  மேலும் தெரிவித்தார்.

தனது தலைமையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் அறிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பினை ஆதரித்த தங்கள் கட்சி தற்போது தனித்து போட்டியிட காரணமென்ன என கேள்வி எழுப்பப்பட்ட போது அவர்களுடைய கட்சியின் ஒப்பந்ததில் நாம் கையெழுத்திட்டவில்லை அவர்களின் பங்காளி கட்சிகளின் கையொப்பமிடும் நிகழ்வு இம் 2ம் திகதி கொழும்பில் நடைபெற்றது. நூம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை கொடுத்து இருந்தோம். தற்போதைய நிலையில் அவர்களுடன் இணைவது சரியான அரசியலாக தோன்றவில்லை ஆனால் அந்த கட்சியில் நாம் இணையவில்லை.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட விரும்பினோம் அப்போது முன்னாள் அமைச்சரும் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான  விஜயகலா எம்மை இணைத்தால் தனது பதவிகள் எல்லாவற்றினையும் ராஜினாமா செய்வதாக மிரட்டினார்.அதனால் அப்போது கூட்டு சாத்தியப்படவில்லை.தற்போது நாமே விலகியிருக்கின்றோம்.

எமது கட்சி சாதாரண பாட்டாளி மக்களது.கொழும்பு இறக்குமதிகளோ,கோடீஸ்வரர்களதோ அல்லது அரசியல்வாரிசுகளதோ இல்லையெனவும் தெரிவித்த அவர் மக்களை நம்பியே தாம் தேர்தல் களம் குதிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே கட்சியின் மூத்த உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் தனது துணைவியாரான மாநகரசபை உறுப்பினர் முன்னிலையில் வேட்பாளர் படிவத்தில் இன்று கையொப்பம் இட்டிருந்தார்.

No comments