சஜித் தலைகீழாக நின்றாலும் முடியாது - டில்சான்

சஜித் பிரேமதாச தரப்பினர் எவ்வாறான பலத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்கினாலும், பொதுஜன பெரனமுனவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெரமுன உறுப்பினருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார்.

காலியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பலமான தலைமையொன்று உள்ளது. இதனால், பொதுத் தேர்தலில் எமக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமக்கு எதிரான தரப்பினர் இன்னும் சின்னத்தைக்கூட முடிவு செய்யவில்லை. இவ்வாறானவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்று சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப எமக்கு சரியானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று சஜித் பிரேமதாஸவுடன் இருக்கும் அனைவரும், ஜனாதிபதித் தேர்தலின் போதும் இருந்தார்கள். இருப்பினும் அவர்களால் வெற்றி பெற முடியாது போனது. எனவே, நாம் அந்தத் தரப்பினர் தொடர்பாக அச்சமடையப் போவதில்லை.

நாம் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வது உறுதியாகும்.எம்முடன் யார் இணைந்தாலும், இணையாவிட்டாலும் எமக்கான வெற்றி உறுதியாகிவிட்டது. - என்றார்.

No comments