3 மாவட்டங்கள் ஆபத்தில்?

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (24) காலை 6 மணிக்கு விலக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments