வங்கிச்சேவை அவசியம்:கணேஸ் கோரிக்கை


ஊரடங்கு நடைமுறையிலுள்ள வேளையில் மக்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வங்கிச்சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என
கோரிக்கை ஒன்றினை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
மக்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வேளையில் அவர்களுக்கான பொருட்களை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்கின்றார்கள். இதற்கு மக்களது கைகளில் பணம் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. கைகளில் பணம் இல்லாது போய்விடில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும். ஐந்து மாவட்டங்களிற்கு ஒரு வாரமாக தொடர்ச்சியான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தமது தேவைகளுக்காக பணத்தினை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலை தொடர்வதால் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான மாற்று நடைமுறைகளை செயற்பாட்டிற்கு கொண்டு வருதல் அவசியமாகின்றது.
இதனால் ஊரடங்கு வேளையிலும் குறிப்பிட்ட ஓரிரு நாட்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நாட்களில் வங்கியுடன் தொடர்பு கொண்டு குறித்த நேர அனுமதியினை பெற்றுக்கொண்டு வங்கிக்கு சென்று மக்கள் தமது சேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைதல் நன்று. மேலும் யுவுஆ மூலமாக பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் குறித்த அட்டையுடன் வங்கிக்கு செல்வதற்கு ஊரடங்கு வேளையில் அனுமதி வழங்கப்படல் வேண்டும். மேலும் வங்கிச் சேவையினை வீட்டிலிருந்தே செயற்படுத்த கூடிய வகையில் வங்கி தொடர்பு இலக்கங்கள் பயன்பாட்டிலிருத்தல் அவசியமாகும். இதன்மூலம் வங்கியுடன் தொடர்பு கொண்டு தேவையான தரவுகளையும் வங்கி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஏதுவாக தொடர்பிலக்கங்கள் செயற்பாட்டிலிருத்தல் வேண்டும்.
எனவே மேற்படி வங்கி சேவைகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தி அவற்றிற்கு விரைவில் பொருத்தமான தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments