போதையில் பெரமுன அமைப்பாளர் கைது?

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்றிரவு (24) மதுபோதையில் நடமாடிய பொதுஜன பெரமுன கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான திருலோகநாதன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது இவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுபோதையில் கைது செய்யப்பட்ட இவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments