கல்குடாவை தக்க வைக்க வேண்டும்

நாளை (02) நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். இனி எமது பிரதேசத்தினை தேர்தல் ஆட்கொள்ளும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

இன்று (01) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

கல்குடாவின் தலைமைத்துவத்தினை கல்குடாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அல்லது கல்குடாவில் இருக்கின்ற முப்பத்தி எட்டாயிரம் வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளை கொண்ட கல்குடாவில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்திற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் தயாராக இல்லாத போது இந்த பிரதேசத்தில் ஒரு பாடசாலை, ஒரு அதிபர், பள்ளிவாசல் சமூகத்துடன் பேசி இந்த காணியை பெற்றமை, பாடசாலையை கொண்டு வந்தமை இவைகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் அல்ல. ஆனால் எங்களுடைய பார்வை, நோக்கு எங்களுக்கு தெரியும். நீங்கள் தரும் புள்ளடியால் நாங்கள் உங்களுக்கு செய்து தர நினைக்கின்றோம். - என்றார்.

No comments