வடமராட்சியில் நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் 12ம் ஆண்டு நினைவேந்தல்!

சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுபினரும், வடமாகாண பனைதென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பேரிணைய பொதுமுகாமையாளரான மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் 12 ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி மாலை சந்தியில் அமைந்துள்ள கேட்போர் கூட மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களோடு நினைவேந்தல் பேரெளிச்சியோடு நிறைவுற்றுள்ளது.

மாமனிதர் சிவநேசன் அறக்கட்டளையும்
தமிழத்தேசியமகள் முன்னணியின் மாமனிதர் நிகழ்வு ஏற்பாட்டு குழுவும்,  இணைந்து ஒழுங்குபடுத்திய நிகழ்வில், மாமனிதரின் மனைவி, பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கரவெட்டி கிழக்கு வாழ் மக்களோடு, தமிழத்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் தலைவர் ஆனந்தராஜா மற்றும் முன்னணி கட்சி பொறுப்பாளர், முன்னணி ஆதரவாளர்கள்,ஏனைய கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்த மக்கள் ஆதரவோடு ஏற்பாட்டுக்குழுவைச் சேரந்த துசாந்தன் தலமையில் நேற்று (06.03.2020) மாலை நடைபெற்று முடிந்துள்ளது.

No comments