கொரொனோ தடுப்பூசி தயாரிப்பு உரிமத்துக்கு அமெரிக்க, ஜெர்மனி இடையே மோதல்!

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஜேர்மனியை தளமாகக் கொண்ட க்யூர்வாக்(CureVac) மீது ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் அரசாங்கங்கள் மல்யுத்தம் செய்கின்றன என்று ஜெர்மன் செய்தித்தாள் வெல்ட் அம் சோன்டாக்(Welt am Sonntag) தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஜேர்மன் விஞ்ஞானிகளுக்கு பெரும் தொகையை வழங்குவதாகப் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி முக்கிய ஜெர்மன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளைஅவர்களின் கண்டுபிடிப்பை காப்புரிமை பெற அவர் விரும்பினார் என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுதொடர்பில் விளக்கம் அளித்துள்ள அந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான க்யூர்வாக்(CureVac) "நாங்கள் ஒரு உலகெங்கிலும் ஒரு தடுப்பூசியை உருவாக்க விரும்புகிறோம், தனிப்பட்ட நாடுகளுக்கு அல்ல,"என்று கூறியுள்ளார். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஜெர்மனுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் "கடந்த இரண்டு வாரங்களாக நிறுவனத்துடன் நல்லமுறையில் பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறோம் "என்று கூறியுள்ளார்.

எனினும் உலகம் கோரவினால் கொண்டுள்ள நெருக்கடிகள் பல உயிரிழப்புக்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ள வண்ணம் இருக்கையில் பல மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் இடுபட்டுவருகின்றது ஆனால் பன்னாட்டு முதலாளி அரசுகள் அந்தந்த கண்டுபிடிப்புக்களை கையகப்படுத்தி அதை தங்களது வியாபார உத்தியாக்கவும் காப்புரிமை பெற்று பெருமை கொள்ளவே முனைவது பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தவர்களைக் கவலைகொள்ள வைத்துள்ளதாக ஆய்வு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments