வடக்கில் கொரோனா அபாய கட்டத்தில்:எச்சரிக்கை!


நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகளினில் அரசியல்வாதிகள் மூழ்கியிருக்க வடக்கில் கொரோனா தாக்கம் வேகமாக பரவலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நிறைவேற்றப்படவில்லையென மருத்துவ சங்கம் பொறுப்பு வாய்ந்த ஆளுநரோ வடக்கில் இல்லாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க முன்னெடுக்க வேண்டிய தனிமைப்படுத்தல் சொல்லிக்கொள்ளத்தக்கதாக யாழில் முன்னெடுக்கப்படவில்லை.வர்த்தக நிலையங்கள் வழமை போல இயங்குகின்றன.மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தவில்லையென மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நிலைமையினை மக்களிற்கு விளங்கப்படுத்த மருத்துவ சங்கம் தற்போது முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments