ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 109 அமெரிக்க ராணுவத்துக்கு மூளை பாதிப்பு!


ஈராக்கில்  உள்ள  அமெரிக்க வான்படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத்  தாக்குதலின் சேதங்களை வெளிப்படுத்தாது இருந்த அமெரிக்க தற்போது ,  109 அமெரிக்க சேவை படையினர் மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை வெளியிட்டுள்ளது,

கடந்த ஜெனவரியில் ஈரானின் புரட்சிப்படை  தளபதி காஸ்ஸெம் சோலைமணியை அமெரிக்கா படுகொலை செய்ததற்கு பதிலடியாக  ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் மறுத்தார்.

அனால் சில வாரங்களில், சில துருப்புக்கள் லேசான அதிர்ச்சிகரமான மூளைக் காயங்களுக்கு ஆளானதாக வாஷிங்டன் ஒப்புக் கொண்டது, எனினும் தற்போதைய  சமீபத்திய புள்ளிவிவரங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டதை விட கணிசமாக அதிகம் என்று  என்று பென்டகன் பத்திரிகை செயலாளர் அலிஸா ஃபரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments