மாங்குளத்தில் மனித புதைகுழி?


இறுதி யுத்த கால போர் அரங்குகளில் ஒன்றாக இருந்த மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் கண்ணிவெடியகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே அகழ்வு பணியின் போது மனித எச்சங்களை அடையாளங்கண்டுள்ளனர்.

இதனிடையே ஊடகங்களுக்கு இது தொடர்பிலான செய்திகளை சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளரை வெளியில் தள்ளி வளாக வாயிலை போலீசார் மற்றும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் இழுத்து மூடியுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகள் புதைகுழியினை மூடிவிட மேற்கொள்ளப்படும் முயற்சியாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments