மூடி மறைக்க முயற்சி?


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள் ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும் அவற்றை எமக்கு கொடுக்க மறுக்கின்றனர் என ஹிருனிகா பிரேமசந்திர சபையில் கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆளும் தரப்பின் குரல் பதிவுகள் இதில் இருப்பதாலேயே இப்போது குரல் பதிவுகளை மூடி மறைக்கப்  பார்க்கின்றனர் என்றும் ஹிருனிகா தெரிவித்தார்.

அவர்கள் தர மறுப்பதற்கான காரணத்தை கேட்டால் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே தரமுடியும் என கூறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மிகவும் மோசமா எம்மீது அவமதிப்பு கருத்துக்களை கூறிய அவர்கள், தற்போது அந்த தொலைபேசி பதிவுகளில் ஆளும்  தரப்பின் உறுப்பினர்களின் குரல் பதிவுகளும் உள்ளதாக கூறியதை அடுத்து இவ்வாறு மூடி மறைப்பது மோசமான செயற்பாடாகும் என்றும் அவர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

No comments