வந்தது ரஞ்சனின் ஒரு சீடி?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஒரு இறுவெட்டு மாத்திரம் நாடாளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments