வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?


இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியிருந்தது. 

ஜக்கிய தேசியக்கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கிய அங்கிகாரத்தின் பிரகாரம், ரஞ்சித் மத்தும பண்டாரவை, கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

'சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணியின் பெயர், சின்னம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இன்னமும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. பெயர், சின்னம் தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படுவதோடு கூட்டணித் தலைவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படும்' என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமது கூட்டினுள் தேர்தலிற்கு முன்னதாக கூட்டமைப்பு வராது என்பதன் அடிப்படையில் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

No comments