மச்சான்:சித்தப்பா மகன் எல்லோரும் பேரவைக்கு?


யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு யார் யார் எல்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அங்கு பணியாற்றிவரும் சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

உண்மையில் யார் யார் உறுப்பினர்
அங்கஜன் இராமநாதனின் சித்தப்பா மகன். 2016இல் கணக்கியலில் இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றவர். 30 வயதிற்குற்பட்டவர். மாற்றத்தின் நாயகன் மைத்திரிபால சிறிசேனவினால் 2017இல் இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் மூன்றாம் செயலாளராக அரசியல் நியமனம் பெற்றவர். தற்பொழுது அப்பாவின் கபிடல் குழுமத்தில் பணிப்பாளர்.

இவர் தற்பொழுது யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர். பேராசிரியர் நியமனங்களில் தெரிவுக் குழுவில் இடம்பெறும் தகுதி உடையவர். அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்ய வாக்களிக்க தகுதி உள்ளவர்.

அங்கஜன் இராமநாதனின் மச்சான் உறவு முறையானவர். இந்தியாவில் விவசாயப் பட்டப் படிப்பு முடித்தவர். கடந்த சனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச தமிழ் மொழிபெயர்ப்பாளர்.

இவர் தற்பொழுது பல்கலைக்கழக பேரவை உறுப்பினர். பேராசிரியர் நியமனங்களில் தெரிவுக் குழுவில் இடம்பெறும் தகுதி உடையவர். அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்ய வாக்களிக்க தகுதி உள்ளவர்.

முதுதத்துவமானி பட்டத்திற்காக விண்ணப்பம் செய்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஒருவரும் பேரவை உறுப்பினர்.

இவை உதாரணங்கள் மாத்திரமே.

அமைச்சர் பெருமான் முன்னாள் (?) கட்சி உதவியாளர்களை, வேட்பாளர்களை பிரேரித்துள்ளார்.

அரசியல் நியமனங்கள் செய்யப்படுவது இது முதற் தடவையல்ல. ஆனால் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்பதே எனது சிற்றறிவு.

பல்கலைக்கழக சட்டம் கல்வி, நிர்வாகம் போன்றவற்றில் அதிசிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள் வெளி வாரி உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சுற்று நிருபம், உள்வாரி உறுப்பினர்களுக்கு (பீடாதிபதிகள், துணைவேந்தர், மூதவை பிரதிநிதிகள்) சமனான தகுதியுடைய உறுப்பினர்களை அவர்களை பொறுப்புக் கூற வைக்கக் கூடிய, உயர் பதவி ஒன்றில் குறைந்தது 10 வருட அனுபவம் மிக்கவர்களை  வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் எனக் கூறுகின்றது. ஒன்றில் எமது உள்ளக உறுப்பினர்களின் தகமையை ஆணைக்குழு குறைத்து மதிப்பிட்டு இருக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட எல்லோரும் பல்கலைக்கழகம் சிதைவடைந்து அழிந்து விட வேண்டும் என விரும்புகின்றனராவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments