தமிழ் பொலிஸை கொன்ற இருவர் கைது

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தமை கொலை என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவர் அடிகாயங்களுடன் இன்று (06) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, குறித்த பொலிஸ் உத்தியோத்தர் அடித்துக்கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் அஸ்மி, வவுணதீவு நாவற்குடா ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments