இந்தியாவில் ட்ரம்ப்க்கு சிலை வைத்து கும்பிடும் நபர்

இந்தியா -தெலுங்கானா மாநிலம் ஜங்கனோன் நகரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வாழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அனி ஊடகத்துக்கு குறித்த நபர் வழங்கிய பேட்டியில், "ட்ரம்ப் கடவுள் போன்றவர். நான் டிரம்ப் நீண்ட காலம் வாழ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருகின்றேன். அவருக்கு சிலை வைக்க ஒரு மாதமானது. தினமும் வேலையை தொடங்கும் முன் ட்ரம்ப் படத்திற்கு பூஜை செய்து அவரை வழிபட்டு தான் எனது வேலையை தொடங்குவேன்". என்றார்.

அத்துடன் இந்தியா - அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என பூஜை செய்து வருகின்றேன். டிரம்பை நான் சந்திக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் குறித்த நபர் கூறியுள்ளார்.

No comments