கூட்டமைப்பின் வேட்பாளராக வேதநாயகன்?


தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் தீவக தொகுதிகளை இலக்கு வைத்து நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் பழிவாங்கலாக அவர் தூக்கியடிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கௌரவத்தை வணங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

இதனிடையே அரசியல் அபிலாசைகள் இருக்கின்றதே தவிர தான் ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்ல எனவும் தான் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாக நடக்கவும் இல்லை என ஓய்வு பெற்று செல்லும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தனது சேவையினை தான் நேர்மையாகவே செய்ததாகவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும் என நா.வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

பலர் வந்து தான்னிடம் தேர்தலில் போட்டியிட போகின்றீர்களா என கேட்டதாகவும் அவ்வாறு ஒரு முடிவு தன்னிடம் இல்லை எனவும் நா.வேதநாயகன்; தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தனது ஓய்வை அறிவித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தின் பிரிவுபசார நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக நாகலிங்கம் வேதநாயகன் தனது கடமையினை பொறுப்பேற்றிருந்தார்.

No comments