மீண்டும் தமிழகத்திலிருந்து யாழுக்கு கப்பல்?


தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவை பற்றி மீண்டும் பேச்சுக்கள் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவாதிரையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் -சிதம்பரத்திற்கிடையே கப்பல் சேவையினை ஆரம்பிக்க ஈழம்  சிவசேனை அமைப்பு முற்பட்ட போதும் அம்முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments