மாலைதீவு தூதுவராக இலங்கைப் பாடகர்

மாலைத்தீவுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பாடகர் ரோஹன பெத்தகேவை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று (28) கூடியது.

இன்றைய கூட்டத்திற்கு சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகேவும் அழைக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments