வெள்ளை வான் சாரதிகள் கைது - கோத்தாவின் மாஸ்டர் பிளான்?

கம்பஹாவில் 4.4 மில்லியன் ரூபா கொள்ளையிட்டமை தொடர்பில் "வெள்ளைவான்" மனிதக் கடத்தல் சாரதிகளாக அறியப்பட்ட இருவர் உட்பட 10 பேர் இன்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி இரண்டாம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ரி-56 துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments