மதத்தின் பெயரால் மக்களை தூண்டுகின்றனர் ரஜினிகாந்த் வேதனை

இந்திய டெல்லியில் வன்முறை நடந்திருப்பதற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியை காரணம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது
 டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.

டெல்லி வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உளவுத்துறை தோல்வியடைந்திருக்கிறது என்றால் அது உள்துறையின் தோல்வி என்று பொருள் கொள்ள வேண்டும்.
சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரால் மக்களை தூண்டி வருகின்றனர். இது சரியான போக்கே கிடையாது. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments