வவுணதீவில் பயங்கரம்- தமிழ் பொலிஸ் கொலை

 மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தம்பாப்பிள்ளை சிவராசா (55-வயது) என்பவரே இவ்வாறு சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இனந்தெரியாத நபர்களினால் இதன்போது அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை, முன்னெடுத்துள்ளனர்.No comments