வடக்கிற்கு காசில்லை:திண்டாடும் கோத்தா?


வடமாகாணத்திற்கான அதிகாரத்தை வழங்கி விட்டதாக இலங்கை பிரதமர் இந்தியாவில் தெரிவித்துள்ளதுடன் முன்னாள் வடக்கு முதலமைச்சர் அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை திருப்பிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் ஆயிரத்து இருபத்தேழு மில்லியன் நிதியை அரசு ஜனவரி தாண்டியும் விடுவிக்கவில்லையென வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வரையாக முன்னெடுக்கப்பட்ட பெருமளவு வேலைகளிற்கான கொடுப்பனவுகளை இன்னமும் வழங்கமுடியாதிருப்பதாகவும் மத்திய திறைசேரி நிதியை விடுவிக்காது திண்டாடிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே வழமை போலவே ஏனைய தரப்புக்கள் போல மகிந்தவும் இம்முறை விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே யாழ். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 880 மில்லியன் ரூபா வேலைத்திட்டத்துக்கான பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. ஏன் என்றால் அதற்கான ஒதிக்கீடு இல்லையென இ;ன்னொரு விளக்கத்தை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கம்பரெலியா என்று கிராமம் கிராமமாகக் கூறியவர்கள் இன்று அவர்களுடைய பணத்தையும் நாங்கள் பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. 
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கு இரண்டு வீடு கட்டியுள்ளனர்.
ஒருவர் மாவிட்டபுரத்தில் வீடு கட்டுகின்றார். கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டியிருக்கின்றார், முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நான்கு ஐந்து வைத்தியசாலைகள் திறந்துவிட்டார்.

இது எல்லாம் யாருடைய பணம்? சிந்தித்தால் நாங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.' என்று தெரிவித்துள்ளார்.

அரசு நிதி வழங்க திண்டாட அதனை தமிழ் தரப்பிற்கு எதிரான பிரச்சாரமாக்கியுள்ளார் அங்கயன். 

No comments