புறக்கணிப்பு மத்தியில் நாவிதன்வெளியில் சுதந்திரதினம்

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபை வளாகத்தில் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) நடைபெற்றன.

பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் காலை இந்த நிகழ்வுகள் பிரதேச சபை அலுவலர்கள், ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து நாவிதன்வெளி கிராம சேவையாளர் காரியாலயத்தில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரி.தேவகுமார் குருக்கள் தலைமையில் சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சமூர்தி உத்தியோகஸ்த்தர்கள், கிராம பொது மக்களின் பங்குபற்றலுடன் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments